உருவானது அர்னாப் புயல்... கடற்கரை பகுதிகளில் கடும் கடல் சீற்றம்! கடலுக்குச் செல்லாத மீனவர்கள்

அர்னாப் புயல் உருவாகியுள்ள நிலையில், தமிழகத்தின் கடலோர பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் கரையிலேயே தங்களது படகுகளை நிறுத்தி வைத்துள்ளனர்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், தற்போது அர்னாப் புயல் உருவாகியுள்ளது. இதன் காரணமாக கடலோர பகுதிகளில் வானிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதுடன், கடல் அலைகளின் சீற்றமும் அதிகரித்துள்ளது.
குறிப்பாக கடற்கரையோரங்களில் பலத்த காற்றுடன் கடல் அலைகள் அதிக உயரத்திற்கு எழும்புவதால், மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதையடுத்து பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லாமல் தங்களது படகுகளை பாதுகாப்பாக கரையில் நிறுத்தி வைத்துள்ளனர்.
ஏற்கெனவே கடலுக்குச் சென்றுள்ள மீனவர்களும் வானிலை நிலவரத்தை தொடர்ந்து கவனிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கடலோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும் தேவையின்றி கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புயலின் நகர்வு, காற்றின் வேகம் மற்றும் மழையின் தீவிரம் உள்ளிட்டவை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அடுத்தடுத்த வானிலை அறிவிப்புகளை பொதுமக்கள் கவனிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அர்னாப் புயலால் தமிழகத்திற்கு பெரிதாக மழை பாதிப்பு இருக்காது. டெல்டா மாவட்டங்கள் இன்று மாலை வரை மழை தொடர வாய்ப்புள்ளது.
aர்னாப் புயலானது ஆந்திர பிரதேசம் மற்றும் ஏனாம் கடற்கரைப் பகுதிகளில், பாபட்லா-விசாகப்பட்டினம் இடையே மிக தீவிர புயலாக வருகிற புதன்கிழமை அதிகாலை கரையைக் கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
Comments
No comments yet. Be the first to write.