📅 Tuesday, 27 October 2026 📍 Detecting location… ⛅ --°C
தமிழகம்

தேனி சிறையிலிருந்து கைதிகள் தப்பியோடிய விவகாரம்: 9 காவலர்கள் பணியிடை நீக்கம்!

தேனி சிறையிலிருந்து கைதிகள் தப்பியோடிய விவகாரம்: 9 காவலர்கள் பணியிடை நீக்கம்!

தேனி மாவட்ட சிறையிலிருந்து ஒரே நேரத்தில் 17 கைதிகள் தப்பியோடிய சம்பவத்தில் சிறைத்துறை காவலர்கள் 9 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறையில், தேக்கம்பட்டியில் மாவட்ட சிறை அமைந்துள்ளது. 200 கைதிகள் மட்டுமே அடைப்பதற்கு வசதி உள்ள சிறையில் 334 கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். இந்தச் சிறையில் ஒரே அறையில் 17 கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர்.

ந்த நிலையில் நேற்று (அக். 26) இரவு, அந்த அறையில் இருந்த கைதி ஒருவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகச் சிறைக் காவலர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சிறைக் காவலர்கள் அறையின் கதவைத் திறந்து உள்ளே சென்றுள்ளனர். அப்போது அங்கு மறைந்திருந்த கைதிகள், காவலர்களைத் திடீரென தாக்கிவிட்டு சிறையிலிருந்து தப்பினர்.

இந்தத் தாக்குதலில் சிறைக் காவலர் ஒருவருக்குத் தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் இரண்டு காவலர்கள் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. காயமடைந்த காவலர்கள் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பியோடியதைத் தொடர்ந்து தேனி மாவட்டம் முழுவதும் போலீசார் எச்சரிக்கை கொடுக்கப்பட்டு, தப்பியோடியவர்களின் புகைப்படங்கள் மூலமாக அவர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தப்பியோடிய கைதிகள் கேரளத்துக்குச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், தமிழக – கேரள எல்லைப் பகுதிகளில் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.மேலும், தேனி மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களிலும் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த தேனி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரவீன் கவுதம், தேக்கம்பட்டி சிறைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

கைதிகள் தப்பியோடிய விவகாரத்தில் சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் நேரில் ஆய்வு செய்ய இன்று காலை சென்னையிலிருந்து விமானம் மூலமாக மதுரை வந்தார்.

கைதிகள் தப்பியோடிய சம்பவத்தில் இதுவரை 9 காவலர்களை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.இந்த விவகாரம் தொடர்பாக தேனி மாவட்ட போலீசாருடன் திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த போலீசாரும் இணைந்து தப்பியோடிய 17 கைதிகளைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சிறைக் காவலர்களைத் தாக்கிவிட்டு ஒரே நேரத்தில் 17 கைதிகள் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments

No comments yet. Be the first to write.