📅 Tuesday, 27 October 2026 📍 Detecting location… ⛅ --°C
வணிகம்

நாளை முதல் விலையை உயர்த்துகிறது ஆவின்? பொதுமக்கள் அதிருப்தி..

நாளை முதல் விலையை உயர்த்துகிறது ஆவின்? பொதுமக்கள் அதிருப்தி..
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில், தமிழ்நாட்டின் முன்னணி பால் கூட்டுறவு நிறுவனமான ஆவின், தனது பால் பொருட்களின் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
தயிர், வெண்ணெய், நெய், மைசூர்பா உள்ளிட்ட 67 வகையான ஆவின் பால் பொருட்களின் இந்த புதிய விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது. மூலப்பொருட்களின் விலை உயர்வு, கொள்முதல் செலவுகள் மற்றும் இதர நிர்வாகச் செலவுகள் அதிகரித்துள்ளதே இந்த விலை உயர்விற்கு முக்கியக் காரணம் என ஆவின் நிர்வாகம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
 
புதிய அறிவிப்பின்படி, 500 மி.லி ஆவின் நெய் விலை ரூ. 365-லிருந்து ரூ. 400 ஆகவும், 500 மி.லி தயிர் ரூ. 35-லிருந்து ரூ. 40 ஆகவும், 250 கிராம் மைசூர்பா ரூ. 140-லிருந்து ரூ. 160 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் 200 கிராம் ஆவின் மிக்சர் ரூ. 110 என்றும், 100 கிராம் மில்க் பேடா ரூ. 60 என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
 
இருப்பினும், சாமானிய மக்களின் அத்தியாவசியத் தேவையான ஆவின் பாலின் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்க ஆறுதலான செய்தியாகும்.

Comments

No comments yet. Be the first to write.